டெல்லியில் விமானம் புறப்பட இருந்த கடைசி நிமிடத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியான சம்பவம்.!

0 2173
தலைநகர் டெல்லியில், விமானம் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில், பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

லைநகர் டெல்லியில், விமானம் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில், பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லியிலிருந்து, புனேவுக்கு, இண்டிகோ நிறுவனத்தின், Airbus A320 Neo ரக விமானம், வியாழக்கிழமையன்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு, விமான ஓடுபாதைக்கு வந்தது. அப்போது, விமான பணிப்பெண்ணிடம், பயணி ஒருவர், தமக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக, தமக்கு வந்த தகவலை காண்பித்துள்ளார். இதையறிந்த விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, மீண்டும் விமான நிறுத்த பகுதிக்கு விமானத்தை கொண்டுவந்தார்.

இதையடுத்து, கொரோனா பாதித்த பயணி மற்றும் பிற பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும், கிருமிநாசினி கொண்டு தூய்மைசெய்யப்பட்டது. 2 மணி நேரம் தாமதமாக, அந்த விமானம், டெல்லியிலிருந்து புனேவுக்கு புறப்பட்டுச் சென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments