அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளில் போட்டியிட ஆளும் பாஜக முடிவு

0 1827
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளில் போட்டியிட ஆளும் பாஜக முடிவு செய்துள்ளது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளில் போட்டியிட ஆளும் பாஜக முடிவு செய்துள்ளது.

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு மார்ச் 27, ஏப்ரல் 1, 6 ஆகிய மூன்று கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கண பரிசத், மக்கள் விடுதலைக் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன.

பாஜக 92 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அசாம் கண பரிசத்துக்கு 26 தொகுதிகளும், மக்கள் விடுதலைக் கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவில் 84 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதித் தொகுதிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்தபின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments