செல்பேசியில் தரவுகளை அழித்த டாப்சீ, அனுராக் காஷ்யப் - வருமான வரித்துறை ஆய்வில் தகவல்

0 9268
நடிகை டாப்சீ, இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர், தங்கள் செல்பேசிகளில் இருந்த தரவுகளை அழித்திருப்பது வருமான வரித்துறையினரின் சோதனையில் தெரியவந்துள்ளது.

நடிகை டாப்சீ, இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர், தங்கள் செல்பேசிகளில் இருந்த தரவுகளை அழித்திருப்பது வருமான வரித்துறையினரின் சோதனையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் நடிகை டாப்சீ, இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ததில் மொத்தம் முந்நூறு கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் காட்டாத சொத்துக்கள், வருமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நடிகை டாப்சீ 25 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சோதனையின்போது இருவரின் செல்பேசிகளில் தரவுகளை அழித்திருப்பது தெரியவந்ததால், அவற்றைத் திரும்பப் பெறத் தொழில்நுட்ப வல்லுநர்களை வருமான வரித்துறை அணுகியுள்ளது.

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தையடுத்துப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியபோது, இருவரும் செல்பேசித் தரவுகளை அழித்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments