அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

0 16959
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டது. வேட்பாளரை இறுதி செய்யும் வகையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் ஆகியோர் அடங்கிய ஆட்சி மன்றக் குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனை முடிவில், முதற்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகமும் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார். நிலக்கோட்டை தனித் தொகுதியில் அங்கு எம்.எல்.ஏவாக இருக்கும் தேன்மொழிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர், துணைமுதலமைச்சருக்கு அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு, இனிப்பு வழங்கினர்.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்தவுடன் அதிமுக சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments