சீனாவில் பனி மலைக்கு நடுவே வரிசைக்கட்டி செல்லும் லட்சக்கணக்கான ஆடுகள்

0 60612
சீனாவில் பனி மலை மீது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்காக வரிசைக்கட்டி அழைத்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் பனி மலை மீது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்காக வரிசைக்கட்டி அழைத்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள டெக்ஸ் பகுதியில் பசுக்கள், செம்மறி ஆடுகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்து செல்லப்பட்டன.

கால்நடைகளின் இந்த இடம்பெயர்வு 20 நாட்களுக்கு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 5 மாதங்களாக குளிர்கால மேய்ச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும், குளிர்கால மேய்ச்சல் ஜனவரி 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்து வசந்தகால இடம்பெயர்வு தொடங்கியிருப்பதாகவும் ஆடு மேய்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments