கமலுடன் கூட்டணியா? - வைகோ பதில்

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுகிறது - வைகோ
திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், கமல் உடன் மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை என மதிமுக பொதுசெயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திமுக உடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இதுவரை தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசனை கூட்டம் வைகோ தலைமையில் எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக, தனது கூட்டணிக் கட்சிகளை மரியாதையுடன் நடத்துவதாக தெரிவித்தார்.
Comments