பணியிலும் மிரட்டல் களத்திலும் கலக்கல்... கிக் பாக்ஸிங்கில்' கிங்' பட்டம் வென்ற இசக்கி ராஜா!

ஹைதரபாத்தில் நடந்த தேசிய சீனியர் கிக் பாக் சிங் சாம்பியன் போட்டியில் தமிழக அணிக்காக தங்கப் பதக்கம் வென்று அசத்திய பழனி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் இசக்கிராஜா. நெல்லை மாவட்டத்தில் இவர் பணியாற்றிய போது ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். காவல்நிலையத்தில் வழக்கறிஞரின் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டியது வாட்ஸ்அப் மூலம் ரவுடிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து பிரபலமானவர்.
மிகச்சிறந்த கிக் பாக்ஸரான இவர், ஹைதரபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக் பாக்சிங் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டார். இதில், 85 முதல் 90 கிலோ பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதோடு, சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியிலும் கலந்து கொண்டு, ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவுக்கு காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சப் இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா பணிபுரியும் தாலுகா காவல் நிலைய சுவற்றில் தங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு சிபாரிசு தேவையில்லை என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். இது பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Comments