அசாமில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு என காங்கிரஸ் உறுதி

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
அசாம் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கத் தனித்துறை அமைக்கப்படும் என்றும், அரசின் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலி 365 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், வீட்டுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதிமொழி அளித்துள்ளது.
Comments