உத்தரப்பிரதேசத்தில் இருந்து நேபாளத்துக்கு எல்லைத் தாண்டி சென்றவர் சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது நேபாளக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவரைக் காணவில்லை.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது நேபாளக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவரைக் காணவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தா, பப்பு சிங், குர்மீத் சிங் ஆகிய மூவரும் எல்லையைத் தாண்டி நேபாளத்துக்குச் சென்றபோது அந்நாட்டுக் காவல்துறையினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது துப்பாக்கிச் சூட்டில் கோவிந்தா உயிரிழந்தார். நேபாளக் காவல்துறையின் தாக்குதலுக்குத் தப்பிய ஒருவர் ஊர் திரும்பி உத்தரப்பிரதேசக் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது உடன்சென்ற மற்றொருவரைக் காணவில்லை. இது தொடர்பாக உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Comments