சட்டமன்ற தேர்தலுக்கான பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு

0 3594
சட்டமன்ற தேர்தலுக்கான பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என பா.ம.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் இராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும், கே.வி பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும், கல்விக்கடன் தள்ளுபடி, வேளாண் உற்பத்தி பொருட்கள் அரசால் கொள்முதல், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை, பாமக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments