சமையல் எண்ணெய் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து; குடம் குடமாக எண்ணெய் பிடித்து சென்ற மக்கள்..!

சமையல் எண்ணெய் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து; குடம் குடமாக எண்ணெய் பிடித்து சென்ற மக்கள்..!
தர்மபுரி மாவட்டம் காடுசெட்டிப்பட்டியில் விபத்தில் கவிழ்ந்த எண்ணெய் லாரியிலிருந்து மக்கள் குடம் குடமாய் சமையல் எண்ணெயை பிடித்துச் சென்றனர்.
ஓசூரிலிருந்து சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த தாழ்வான விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. டேங்கரில் இருந்து சமையல் எண்ணெய், வயலில் கொட்டுவதை அறிந்த அப்பகுதி மக்கள், குடங்களோடு வந்து எண்ணெயை பிடித்துச் சென்றனர்.
லாரியின் ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Comments