சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து ரூ.33,418 க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்தது
சென்னையில் 22 காரட் அணிகலன் தங்கம் நேற்றைவிடப் பவுனுக்கு 288 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் நாலாயிரத்து 217 ரூபாய்க்கும், ஒரு சவரன் 33 ஆயிரத்து 736 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று ஒரு கிராம் நாலாயிரத்து 181 ரூபாய்க்கும், ஒரு பவுன் 33 ஆயிரத்து 448 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கட்டி வெள்ளி ஒரு கிலோ 69 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைவிட 600 ரூபாய் குறைந்துள்ளது.
Comments