துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பிட்லிஸ் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது. அதில் லெப்டினன்ட் ஜெனரல் ஓஸ்மான் எர்பாஸ் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 9 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
Comments