கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 நிர்வாகிகள் ராஜினாமா; கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் எனத் தகவல்

கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 நிர்வாகிகள் ராஜினாமா; கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் எனத் தகவல்
கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மற்றும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களான விஸ்வநாதன், அனில்குமார், கே.கே. விஸ்வநாதன், மகளிர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் சுஜயா வேணுகோபால் ஆகியோர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 முக்கியத் தலைவர்கள் ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
Comments