பாலியல் தொல்லை; கொலை மிரட்டல்!- பரிதவிக்கும் பெண் எஸ்.பி.

0 5901

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பெண் எஸ்.பி. யிடத்தில் தமிழக சிறப்பு டி.ஜி.பியாக இருந்த உயர் அதிகாரி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த அதிகாரி காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டுமென மாதர் சங்கங்கம் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போது, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், உயர் அதிகாரி மீது புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு , புகாரை வாபஸ் வாங் குமாறு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 10- க்கும் மேற்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழுவாக சேர்ந்து கொலை மிரட்டல் வருவது குறித்து தமிழக டி.ஜி.பி திரிபாதியிடத்தில் மனு அளித்துள்ளனர்.

மனுவில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் உள்ள டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மற்றும் எஸ் பி அந்தஸ்தில் உள்ள இரு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பாதிகப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர் மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments