வைக்கோல் வாங்க வைத்திருந்த பணம் பறிமுதல்... வேதனையில் விவசாயி!

0 4871
விவசாயி பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்

மாடுகளுக்கு தீவனமான வைக்கோல் வாங்க சென்றவரிடத்தில் பணத்தை தேர்தல் பறக்கு படையினர் பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தனிநபர் ஒருவர் 50,000 க்கும் மேல் வைத்திருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படும். ஆனாலும், இது குறித்து சரியாக விழிப்புணர்வு இவ்வாமல் உரிய ஆவணம் இல்லாமல் பலரும் பணத்தை கொண்டு செல்வதால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ய நேரிடுகிறது. அப்படி, தன் மாடுகளுக்கு வைக்கோல் வாங்க சென்ற விவசாயி ஒருவர் தன் பணத்தை பறிகொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராஜேந்திர பட்டினம் பகுதியில், சமூக நலத்துறை வட்டாட்சியர் செந்தில் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து, ஜெயங்கொண்டத்தில் மாடுகளுக்கு வைக்கோல் வாங்குவதற்காக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த, தருமன் என்பவர் சென்று கொண்டிருந்தார். தருமன் வைத்திருந்த பையில் இருந்த  ரூ. 86, 500 அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டதால், அந்த பணத்தை விருத்தாச்சலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

அதே போல,  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபுரம் நாட்டார்வட்டம் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக மறந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் படம் பொறித்த கை பையில் புடவை வைத்து அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் வழங்கி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விநியோகம் செய்த சுமார் 59 புடவைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புடவைகளை துணியால் கட்டி சீல் வைத்து திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் ஜோலார்பேட்டை பகுதியிலும் 5 புடவைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் படம் பொறித்த கை பையில் பகிரங்கமாக புடவைகளை வாக்காளர்களுக்கு வழங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments