புதுச்சேரியில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடிப்பு எதிரொலி.. தி.மு.க. தரப்பில் என்.ஆர்.காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்

0 2024
புதுச்சேரியில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடிப்பு எதிரொலி.. தி.மு.க. தரப்பில் என்.ஆர்.காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்

புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணி கட்சிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை தலைமையேற்க திமுக தரப்பில் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளர் நாஜிம் வெளியிட்ட வீடியோவில், புதுச்சேரியின் நலன் கருதி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மத சார்பற்ற கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமை ஏற்க வேண்டுமென தான் வலியுறுத்தியதாகவும், அது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்த போது நல்ல கருத்து என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சி வரக் கூடாது என்பதால் ரங்கசாமியை ஏற்க முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் சாதகமான பதிலை தெரிவித்து உள்ளதாகவும் வீடியோவில் பதிவிட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments