கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ஒபெக் அமைப்பு நாடுகளுக்கு மத்திய அரசு மீண்டும் கோரிக்கை

0 798
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ஒபெக் அமைப்பு நாடுகளுக்கு மத்திய அரசு மீண்டும் கோரிக்கை

பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையில் நிலைத்தன்மை நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,கச்சா எண்ணெய் தேவை அதிகரித்த போதிலும் உற்பத்தி அதிகரிக்கப்படாததால் அதன் விலை உயர்ந்து வருகிறது என்றார்.

2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ஒபெக் அமைப்பு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments