ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்

0 903
ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்

வ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

உணவு வீணாவது பற்றி ஐநா.சபையின் ஆய்வு அறிக்கை நேற்று வெளியானது. இதில் உலகம் முழுவதிலுமாக மொத்தம் 17 சதவீத உணவு யாருக்கும் பயனின்றி வீணாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தான் இந்த உணவு வீணாவது அதிக அளவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 பில்லியன் மக்கள் ஒருவேளை கூட உணவு கிடைக்காமல் பசி பட்டினியால் தவிக்கின்றனர். ஆண்டுதோறும் பல நூறு பேர் பட்டினியால் சாகும் போது கடந்த 2019ம் ஆண்டில் 931 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உணவு வீணாவதைக் குறைக்க வேண்டும் என்றும் ஐநா.சபையின் உணவு பாதுகாப்பு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments