அடி தாங்கி, இடி தாங்கி, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி..! முதுகில் முறைவாசல்

0 48497
அடி தாங்கி, இடி தாங்கி, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி..! முதுகில் முறைவாசல்

காதலித்து திருமணம் செய்த மனைவியை ஏமாற்றி விட்டு, இளம் பெண்ணுடன் வீடு எடுத்து ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்த கேபிள் ஆபிரேட்டரையும் அவரது காதலியையும், உறவினர்களுடன் சென்று சுற்றி வளைத்த மனைவி, அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆயிரம் அடிவாங்கிய அபூர்வ சிந்தாமணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

அடிப்பது பெண்ணாக இருந்தாலும், திருப்பி அடிக்க இயலாமல், வலிக்காத மாதிரியே, உச்சந்தலையில் செருப்பால் அடிவாங்கிக் கொண்டிருக்கும் இவர் தான் அடிதாங்கி அஞ்சான் ராஜூ பாய்..!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி மாவட்டம் கொத்தகுடாம் பகுதியில் கேபிள் ஆபரேட்டரான ராஜுபாயையும் அவரது காதலியையும் சரமாரியாக அடித்து துவைத்துக் கொண்டிருப்பது 13 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூபாயை காதலித்து கரம் பிடித்த முதல் மனைவி..!

மனைவியிடம் இருந்து, திருமணத்தின் போது, பங்களாவீடும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் வரதட்சணையாகப் பெற்றுக்கொண்ட ராஜூ பாய்க்கு, பதினோரு வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்தில் இருந்து ராஜூபாய், சரிவர வீட்டுக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் சண்டையிட்டு கோபித்துச் செல்வது போல வீட்டை விட்டுச்சென்ற ராஜுபாய் அதே பகுதியில் ஒரு திருமணமாகாத இளம்பெண்ணுடன் வீடு எடுத்து ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த விவரம் மனைவிக்கு தெரியவந்ததால் உறவினர்களுடன் வீட்டுக்குள் புகுந்து கணவனையும் கணவனின் காதலியையும் சிறப்பாக கவனித்த அதிரடி காட்சிகள் தான் இவை..!

காதல் வலைவிரித்து கணவனை தள்ளிச்சென்ற அந்த அபூர்வ சிந்தாமணியை போட்டு தாக்கி நிலைகுலையச் செய்ததோடு, சற்று தெளியவிட்டு மீண்டும் தலைமுடியை பிடித்து இழுத்து போட்டு அடுத்த ரவுண்டு கச்சேரி வைத்தார்

வாங்கிய அடிகளால், முகமெல்லாம் சிவந்து அசையாமல் சிந்தனை சிற்பி போல சோபாவில் அமர்ந்திருந்த கணவன் மீது பாசம் அதிகம் என்பதால் அவனுக்கு அடியும் சற்று அதிகமாகவே விழுந்தது..!

கணவனை காதல் வலையில் வீழ்த்தி தனக்கு போட்டியாக வந்த சிந்தாமணிக்கு முகம் சிவக்க சிவக்க அடி கொடுத்ததோடு, முதுகு பழுக்க முறைவாசலும் செய்தார் மனைவி..!

அடியும் உதையும் அடைமழையாகப் பொழிய அடுத்த நிமிடமே காதலி தலைவாரி ரெடியானதால் இருவரையும் , உருட்டிப் புரட்டி அடிமுறையால் தீட்டி எடுத்தார் மனைவி..!

ஒரு கட்டத்தில் பாலா பட ஹீரோ போல, கையில் கிடைத்த பொருளை எல்லாம் எடுத்து கணவனை தாக்கத் தொடங்கிய மனைவி, கண்ணாடி போட்டோவை எடுத்து தலையில் வைத்த அடியால் கண்ணாடி உடைந்து சிதற, இரும்புக் கம்பியாலும் நெம்பி எடுத்தார்

கணவனும் காதலியும் அவ்வளவு ஸ்ட்ராங்கா, இல்ல அடி கொடுத்த மனைவி வீக்கா என்று கேட்கும் அளவுக்கு ஆயிரம் அடிகள் விழுந்த நிலையிலும், ஹனிமூன் போற ஹப்புல்ஸ் போல காணப்பட்ட இருவரையும் ஜோடியாக ஆட்டோவில் ஏற்றி அழைத்துச்சென்று போலீசில் ஒட்டைத்தனர்.

முதல் மனைவியையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு, புதிய மனைவியை தேடி அலையும் ஆடவர்களுக்கும், அடுத்தவர் கணவனை அபகரிக்க நினைக்கும் பூவையர்களுக்கும் இந்த பெண் வைத்த பூஜை ஒரு எச்சரிக்கை பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments