தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை

தமிழ்நாட்டில், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிப்பதோடு, வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில பாஜக தலைவர் முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில், கன்னியாகுமரியில், பள்ளியொன்றில் மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை, தற்போதைய மத்திய அரசோடு ஒப்பிட்டு, மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு தயாராக வேண்டும் எனக்கூறி, பொதுமக்கள் மத்தியில், பிரிவினையையும், கோபத்தையும், பயத்தையும் தூண்டியதாக, முருகன் கூறியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி மீது, இராஜ துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டம் 124-A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த தண்டனைச் சட்டம் ஆயுள் தண்டனை வரையில் கிடைக்க வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments