மேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோடி..! அமித் ஷா, ஜே.பி.நட்டா தலா 60 இடங்களில் பிரசாரம் செய்ய பா.ஜ.க. ஏற்பாடு

0 1952
மேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோடி..! அமித் ஷா, ஜே.பி.நட்டா தலா 60 இடங்களில் பிரசாரம் செய்ய பா.ஜ.க. ஏற்பாடு

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலை ஒட்டி 20 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

294 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு மம்தாவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது.

பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் என்றும், வருகிற 7-ந்தேதி முதல் அவரது பிரசாரம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அங்கு தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments