சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு

0 1684
சட்டப் பேரவைத் தேர்தலின்போது புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதில், வாக்காளர் தகவல் சீட்டை அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலின்போது புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதில், வாக்காளர் தகவல் சீட்டை அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளையும் வழங்க அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments