பொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி

0 1099
பொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி

பொலிவியாவில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

கோச்ச பம்பாவிலிருந்து சாண்டா குரூஸ்க்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் விமான தொழில்நுட்ப வல்லுநரான எட்வின் துரிமி(Edwin Tumiri) என்பவர் மட்டும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கொலம்பியாவையே உலுக்கிய விமான விபத்தில் 71 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்திலும் துரிமி காயங்களின்றி அதிசயமாக உயிர் பிழைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments