புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

0 1319
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

புதுச்சேரியில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளன. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை என்.ஆர்.காங்கிரஸ் முன்மொழிந்துள்ளது. ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கலாம் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, தனித்துப் போட்டியா, பாஜகவுடன் கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை எனக் கூறியிருந்தார். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் இரு கட்சிகளும் எடுக்கும் இறுதி முடிவைப் பொறுத்தே அங்கு வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments