அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது 4-வது கிரிக்கெட் டெஸ்ட்

0 2302
அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது 4-வது கிரிக்கெட் டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், 2 ல் இந்திய அணியும் வெற்றி பெற்றன. 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று கூறப்படுகிறது.

இன்று காலை 9.30 மணி அளவில் இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments