எஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..! எஸ்.ஐ மீது என்ன கோபமோ ..!?

0 62437
எஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..! எஸ்.ஐ மீது என்ன கோபமோ ..!?

திருவண்ணாமலை கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்தி இறங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவியை அடித்துக் கீழே தள்ளியதாக, போக்குவரத்துப் பெண் காவலர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயில் முன்வாசல் அமைந்துள்ள தேரடி வீதி தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் இடமாகும்.!

இங்கு புதன்கிழமை மாலை ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் மனோகர் என்பவரது மனைவி ஆட்டோவை நடுரோட்டில் நிறுத்தி இறங்கினார். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல இயலாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் உமா, ஆட்டோ டிரைவரிடம் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு இறக்கிவிடுமாறு எச்சரித்த நிலையில், ஆட்டோவில் இருந்து இறங்கிய ஓய்வு பெற்ற எஸ்.ஐ மனோகரனின் மனைவி, காவலர் உமாவை நான் யார் தெரியுமா? எஸ்.ஐ மனைவி என்று கூறியதோடு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உமா, அவர்களை போக்குவரத்திற்கு இடையூறின்றி ஓரமாக அழைத்துச்சென்று ஏன் இப்படி பேசுகிறீர்கள் ? என்று திருப்பிக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு, காவலர் உமாவின் முதுகில் ஒரு அடி விழுந்தது. இதற்கு பதிலடியாக எஸ்.ஐ யின் மனைவி மற்றும் அவர் உடன் வந்த காவலரின் மனைவி ஆகிய இருவரையும் திருப்பி தாக்கி கீழே தள்ளினார் காவலர் உமா..!

அதோடில்லாமல் தன்னை தாக்கியவர்களை விசாரணைக்காக பிக்பாக்கெட் திருடர்களை தள்ளிக் கொண்டு செல்வதை போல அந்த இரு பெண்களையும் காவல் நிலையம் தள்ளிச்சென்றார்

இதனை பார்த்த பொதுமக்கள் இந்த போலீஸ் காரம்மாவுக்கு எஸ்.ஐ மீது என்ன கோபமோ? தெரியலை, அவரு பொண்டாட்டிய ஒரு கை பார்க்காம விடமாட்டாங்க போலயே என்று கமெண்ட் அடித்தபடியே கடந்து சென்றனர்.

போக்குவரத்தை சரி செய்வதற்காக, அதிகார திமிரை கண்டு அஞ்சாமல் பெண்காவலர் பணியில் ஈடுபட்டது ஏற்புடையதாக பார்க்கப்பட்டாலும், அந்த இரு பெண்களின் வயதுக்கு மரியாதை கொடுத்து புத்தி சொல்லி அனுப்பி விட்டிருக்கலாம், அதை விடுத்து பலர் முன்னிலையில் அடித்து கீழே தள்ளியது காவல் துறையினரின் கண்ணியத்தை மீறிய செயலாகவே பார்க்கப்படுகின்றது.

இதையடுத்து இந்த சர்ச்சையில் இருந்து தப்பிக்க எண்ணிய போக்குவரத்து காவலர் உமா, உதவி ஆய்வாளரின் மனைவி தன்னை தாக்கிவிட்டதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தானே சென்று படுத்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments