உங்கள் வழக்கமான கப் தேநீர் அல்ல; கொல்கத்தாவில் ஒரு கப் டீ விலை ரூ.1000..!

ஒரு கப் டீ விலை ரூ.1000..! கிலோ ரூ.3லட்சம் மதிப்பு தேயிலையில் தயாராகும் டீ
கொல்கத்தாவில் உள்ள ஒரு கடையில் ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பிரதீப் கங்குலி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முகுந்த்பூர் பகுதியில் தேநீர் கடை ஒன்றை தொடங்கினார். அவரது கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் 10 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தேநீர் கிடைக்கின்றன. அதில் போ லே (bolay) என்ற தேநீர் மிகவும் பிரபலமானது.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையின் மூல இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த தேயிலை ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய் என்பதால், இதில் தயாரிக்கப்படும் டீ ஒரு கப் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Comments