தீவிரவாத போதை கும்பலுக்கு உதவிய BSF அதிகாரியை கைது செய்தது NIA..!

0 1912
தீவிரவாத போதை கும்பலுக்கு உதவிய பிஎஸ்எஃப் அதிகாரியை கைது செய்தது என்ஐஏ..!

ஷ்கரே தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள போதை மருந்து கடத்தல் காரர்களுக்கு உதவிய எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை தேசிய விசாரணை முகமையான என்ஐஏ கைது செய்துள்ளது.

ரமேஷ் குமார் என்ற இந்த அதிகாரி, எல்லையை கடந்து வரும் போதை மருந்து கும்பல்களுக்கு உதவி செய்தார் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசவிரோத நடவடிக்கைக்காக ஜம்மு காஷ்மீரில் கைதாகும் இரண்டாவது பாதுகாப்பு அதிகாரியாவார் இவர். ஏற்கனவே ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தப்ப உதவிய புகாரில் டிஎஸ்பி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டு, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments