230 தொகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் விபரங்கள் இணையத்தில் வெளியீடு: தேர்தல் ஆணையம் தகவல்

230 தொகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் விபரங்கள் இணையத்தில் வெளியீடு: தேர்தல் ஆணையம் தகவல்
பொதுத்துறை இணையதளத்தில் தேர்தல் அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலையொட்டி நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளின் முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை என திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது 230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் விவரங்கள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ளவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
Comments