கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

0 950
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி அவருக்கு போடப்பட்டது. மார்ச் ஒன்றாம் தேதி முதல் 2வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வரும் என்று தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments