உடல் கிடு கிடுக்க கை நடுநடுங்க ... கன்னியாகுமரி கண்ணன் புதிய சாதனை!

0 1775
இரண்டு மோட்டார் சைக்கிள்களை தூக்கி செல்லும் கண்ணன்

நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் மொத்தம் 270 கிலோ எடையுள்ள இரண்டு மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் 42 மீட்டர் நடந்து சாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கண்ணன். இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்ற இவர் ஏற்கனவே பல  டன் எடையுள்ள லாரியை கயிற்றால் கட்டி இழுத்து உலக சாதனை புரிந்தார் . இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட உடல் வலு தூக்கும்  சங்கம் சார்பில் , நாகர்கோவில்  இந்து கல்லூரி மைதானத்தில் சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் சுமந்தபடி கண்ணன் 42 மீட்டர் தூரத்திற்கு நடந்தார்.

ஏற்கனவே, இவரே நடந்த 30 மீட்டர் தூர சாதனையை முறியடித்து 42 மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை சுமந்து சென்று புதிய சாதனையை கண்ணன் படைத்துள்ளார். உடல் நடுங்க கை கால்கள் கிறு கிறுக்க கண்ணன் இந்த சாதனையை படைத்தார். சில விநாடிகள் அவரால் மேற்கொண்டு நடக்க முடியாதது போன்று தோன்றியது. ஆனாலும், அப்போது சுற்றியிருந்தவர்கள் கொடுத்த உற்சாகம் காரணமாக கண்ணன் விடாமல் முயற்சி செய்து புதிய இலக்கை எட்டி சாதனையை நிகழ்த்தினார்.

கண்ணனின் சாதனையை உலக சாதனை புக் ஆஃ ரெக்கார்டு என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது தேவையான உதவிகளை செய்தால், உலக அளவில் சாதனையை நிகழ்த்த முடியுமென்றும் தமிழக அரசு அதற்கு உதவி புரிய முன் வர வேண்டுமென்றும் கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். சாதனை புரிய துடிக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு தமிழக அரசு வழிகாட்ட வேண்டும் என்றும் கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த சாதனையை என்று ஏராளமானோர் கண்டு ரசித்து பாராட்டினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments