ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு

0 682
ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த சாலையில் இன்று அதிகாலையில் ஷபன்பாஸ் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆயில் டேங்கர் லாரி மண்ணில் சிக்கிக் கொண்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் தற்காலிகமாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments