திருமணம் நடைபெறுவதற்கு முன் மணப்பெண் ஓட்டம்.. நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் புகார்

0 2120
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் திருமணம் நடைபெறுவதற்கு முன் தினம் மணப்பெண் காணாமல் போனதால், நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் திருமணம் நடைபெறுவதற்கு முன் தினம் மணப்பெண் காணாமல் போனதால், நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்து,  நசரத்பேட்டையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் மண்டபம் வந்தனர்.

பெண் வீட்டார் யாரும் வராததால் சந்தேகமடைந்த அவர்கள், பெண் வீட்டாருக்கு தொடர்பு கொண்ட போது மணப்பெண் காணாமல் போனது தெரியவந்தது. இதில் மனமுடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென புகார் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments