ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய பாய்ஸ்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளிகொண்டா பகுதியில், அரசுப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரோமியோவை மடக்கிப்பிடித்த மாணவர்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சீனாவின் குபேர பொம்மைக்கு சட்டையும், லுங்கியும் மாட்டி விட்டது போல உருண்டையாக இருந்து கொண்டு கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்து சிக்கியதால் மாணவர்களால் கும்மி அழைத்து வரப்பட்ட லோக்கல் ரோமியோ இவர்தான்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 3 மாணவிகள் கல்லூரி முடிந்து ஆம்பூர் திரும்புவதற்காக அரசுப் பேருந்தில் பயணித்துள்ளனர்.
பேருந்து இருக்கையில் அமர்ந்து வந்த மாணவிகள் கண் அயர்ந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட பக்கத்து சீட்டில் பயணித்த உருண்டை ரோமியோ, தனது கைவரிசையை மாணவிகளிடம் காட்டியுள்ளார். இதையடுத்து மாணவிகள் அலறியதால் அக்கம் பக்கத்தில் நின்ற மாணவர்கள் ஒன்று கூடி குண்டரை கும்மி எடுத்தனர்.
பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையம் வந்ததும், அவனது சட்டையை பிடித்து இழுத்து வந்த மாணவர்களும்,மாணவிகளும் குண்டனை கும்மியபடியே இழுத்து வந்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரோ, குண்டரை தாக்கிய மாணவர்களை விரட்ட கை ஓங்கினார்..!
சில்மிஷம் செய்து சிக்கிய குண்டரை பத்திரமாக மீட்ட போலீசார், அவனை ஷேர் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்
பொது இடத்தில் பெண்களிடம் அத்துமீறும் குண்டர்களுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் பெண்கள் பதிலடி கொடுத்தால் தான், இதுபோன்று சில்மிஷத்தில் ஈடுபடும் சில்லறைகள் திருந்தும்..!
அதே நேரத்தில் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் தன்னிலை மறந்து அயர்ந்து உறங்குவதை தவிர்த்து விழிப்புடன் பயணிக்க வேண்டியதும் அவசியம்..!
Comments