பெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..! காவல் அதிகாரியின் காதல் சேட்டை

0 23171

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரால் கட்டாய காத்திருபோர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மன்மத காவல் அதிகாரியின் பெயரையும், புகைபடத்தையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ஓடும் காரில், அந்த காவல் அதிகாரி, பெண் எஸ்.பி யின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு சினிமா பாடல்களை பாடச்சொல்லி அத்துமீறிய சம்பவம் முதல் தகவல் அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  

பாலியல் புகார் தொடர்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தையோ, பெயரையோ அடையாளப்படுத்த கூடாது என்பது சட்டம், தற்போது முதல் முறையாக பாலியல் புகாருக்குள்ளாகி இருக்கும் தமிழக காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் அதிகாரியின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதுவும் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடலோர கவிதைகள் படத்தில் நாயகனின் பெயரையொட்டிய முரட்டு காவல் உயர் அதிகாரி மீது பெண் எஸ்.பி அளித்துள்ள புகார் குறித்த முழுவிவரமும் முதல் தகவல் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 21ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தன்னுடன் வருமாறு மன்மத அதிகாரி அழைத்ததாக பெண் எஸ் பி தெரிவித்துள்ளார். இரவு 7.40 மணி அளவில் அவரது வாகனம் உளுந்தூர்பேட்டை நோக்கி புறப்பட்ட நிலையில், ஓடும் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாப்பிட சிலவற்றை கொடுத்த அந்த காவல் அதிகாரி, காரில் வசதியாக அமர்ந்து கொள்ள தனக்கு தலைக்கு தலையணையையும் கொடுத்ததாக தெரிவித்துள்ளார் பெண் எஸ்.பி.

அதன் பின் பாட்டு பாடுமாறு வற்புறுத்தியதால் தான் பாட்டு பாடியதாகவும், பாடியதற்கு வாழ்த்துவது போல் இரண்டு கைகளையும் அந்த அதிகாரி இறுக்கமாக பிடித்து கொண்டதாகவும், பின் 20 நிமிடம் வரை கண்ணை மூடிக் கொண்டே பாட்டு பாடியதாகவும் தெரிவித்துள்ளார் பெண் எஸ்.பி

பிடித்தமான சில பாடல்களை அந்த அதிகாரி குறிப்பிட்டு கேட்டதால் ,யூடியூப்பில் பாடல்களை ப்ளே செய்ததாகவும், அதனை தொடர்ந்து மன்மத அதிகாரி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள ஆரம்பித்ததால் உடனே கைகளை விடுமாறு கதறியதாகவும் தெரிவித்துள்ளார் எந்த பெண் எஸ்.பி

தான் பாதுகாப்பு பணியில் இருந்த சமயத்தில் தனக்கு தெரியாமல் அந்த அதிகாரி எடுத்து வைத்திருந்த தன்னுடைய போட்டோக்களை செல்போனில் காண்பித்ததாகவும், தொடர்ந்து தவறான நோக்கத்தில் தன்னுடன் பேசி வந்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தன்னை , அவர் பேச வற்புறுத்திய போது அலுவல் ரீதியாக மட்டுமே பேசியதாகவும், கார் உளுந்தூர் பேட்டையை நெருங்கும் போது மீண்டும் கைகளை பிடித்து தவறாக நடக்க முயன்றதாகவும், உளுந்தூர் பேட்டை வந்தவுடன் உயர் அதிகாரிகள் அங்கு இருந்ததால் தன்னை விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், தன் காரிலேயே அலுவலகத்துக்கு செல்ல அந்த அதிகாரி வற்புறுத்தியதாகவும்,அதனை மறுத்து வேறு கார் மூலமாக தான் அலுவலகம் சென்று விட்டதாக பெண் எஸ் பி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மறு நாள் 22 ஆம் தேதி தமிழக டி ஜி பி மற்றும் உள்துறை செயலாளரிடம் அந்த அதிகாரி மீது புகார் அளிக்க புறப்பட்டதாக கூறியுள்ளார்.

தனது ஐ ஜி ஜெயராமனிடம் புகார் அளிக்க சென்னை செல்வதாக கூறியதை அடுத்து,தனக்கு அந்த அதிகாரி தொடர்ந்து கால் செய்ததாகவும்,தன்னை தயவு செய்து கால் பண்ணி பேசுமாறு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் ,கடலூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ,தான் அந்த அதிகாரியிடம் சண்டையிட்டு செல்வதாகவும் தன்னை தடுத்து நிறுத்துமாறும் அந்த அதிகாரி பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில்,3 அதிகாரிகளும் மாறி மாறி தன்னை செல்போனில் அழைத்த போது போனை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள அந்த பெண் எஸ்.பி, அதன் பின்னர் தான் செங்கல் பட்டு பரனுர் சுங்கச்சாவடி நெருங்கும் போது செங்கல்பட்டு மாவட்ட உயரதிகாரி தலைமையில் 15 காவலர்கள் வழி மறித்து ,சென்னை செல்ல வேண்டிய தன்னை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தான் பயணித்த கார் சாவியை பறித்துக் கொண்டு சிறப்பு அதிகாரி செல்போன் அழைப்பில் இருப்பதாகவும் அவரிடம் கட்டாயம் பேச வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட அதிகாரி வற்புறுத்திய நிலையில், தன்னிடம் அத்து மீறிய அந்த அதிகாரியிடம் பேசியபோது காலில் விழுந்து தான் செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்பதாக அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தனக்கு வழி விடுமாறு தான் எந்த விஷயமானாலும் தமிழக டிஜிபி திரிபாதி இடம் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியதாகவும் பெண் எஸ்.பி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தான் உனது நண்பன் என அந்த அதிகாரி தெரிவித்ததாகவும், அதற்கு நாம் நண்பர்கள் இல்லை, நான் எஸ்பி, நீங்கள் ஒரு உயர் அதிகாரி என்று பதில் அளித்ததாக கூறியுள்ளார்.

திருப்பூர் உயரதிகாரியிடம் பேசுவதாக ஒப்புக்கொண்டதை யடுத்துதான் தனது வாகனத்தை தொடர்ந்து செல்ல செங்கல்பட்டு மாவட்ட அதிகாரி அனுமதித்ததாக பெண் எஸ் பி தெரிவித்துள்ளார். இதனையடுத்து உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி யை சந்தித்து புகார் அளித்ததாகவும் அந்த புகாரில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் பெண் எஸ்பி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி தனக்கு ஓடும் காரில் உயர் காவல் அதிகாரியால் நடந்த பாலியல் அத்துமீறலை புகாராக எடுத்துச் சொல்வதற்கே இத்தனை தடைகளை தாண்டி வர வேண்டிய நிலை இருப்பது வேதனைக்குறியது.

அதே நேரத்தில் மனமத அதிகாரி மீதான புகார் குறித்து விரைந்து விசாரித்து பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments