11 மாதங்களுக்கு பின்னர் வெள்ளியங்கரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

0 3703

11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் இருந்து செங்குத்தான 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால், வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங் கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments