அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி.. அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது..!

0 1560
அரசு வேலை வாங்கித் தருவதாக 3.28 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக 3.28 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்த்தசாரதியும், அவரது மகன் விஸ்வேஸ்வரனும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னிமலையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் 2019ல் புகார் அளித்தார்.

இதே போல சுமார் 25 நபர்களுக்கு அரசு பி.ஆர்.ஓ வேலை, மின் வாரிய வேலைகள் வாங்கித் தருவதாக மொத்தம் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பார்த்தசாரதி, அவரது மகன் விஸ்வேஸ்வர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட  பார்த்தசாரதி  கைது செய்யப்பட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments