இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது தூதர் பதவியேற்பு

0 988
இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது தூதர் பதவியேற்பு

ஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது தூதர் ஜெருசலேமில் பதவி ஏற்றார்.

ஜெருசலேமில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது தூதராக நியமிக்கப்பட்டுள்ள முகம்மது அல் காஜா, இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லினிடம் தமது அத்தாட்சி பத்திரங்களை வழங்கினார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே முழுமையான ராஜீய உறவுகள் ஏற்பட்டுள்ளன.

பாலஸ்தீன பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என அரபு நாடுகள் கூறி வந்த நிலையில், அது பின்னுக்கு தள்ளப்பட்டு 6 அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments