உலக அளவிலான பணக்காரர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் முகேஷ் அம்பானி

0 9739
உலக அளவிலான பணக்காரர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் முகேஷ் அம்பானி

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உலக அளவிலான பணக்காரர்களின் பட்டியலில் 8 ஆவது இடத்தை பெற்றுள்ளதாக ஹுருன் குளோபல் பணக்கார பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 24 சதவிகிதம் அதிகரித்து இப்போது 6 புள்ளி 09 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த பட்டியலில்  அதானி குடும்பத்தார் 2 புள்ளி 34 லட்சம் கோடி ரூபாயுடன் 48 ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

ஷிவ் நாடார் 1.94 லட்சம் கோடி ரூபாயுடன் 58 ஆவது இடத்தையும், லட்சுமி மித்தல் 1.40 லட்சம் கோடி ரூபாயுடன் 104 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவாலா 1.35 லட்சம் கோடி ரூபாயுடன் 113 ஆவது இடத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments