தி.மு.க. கூட்டணியில் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

0 2105
தி.மு.க. கூட்டணியில் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொய்தீன், ஏணி சின்னத்தில் தங்களது கட்சி போட்டியிடும் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தி.மு.க கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திமுகவினருடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட ஆலோசனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments