சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவதில் மதிமுக உறுதி - மல்லை சத்யா

0 1766

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என்றும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறினார்.
மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் மல்லை சத்யா தெரிவித்தார்.

இதனிடையே, திமுக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எத்தனை தொகுதிகளில் போட்டி, எந்த சின்னம் என்பது அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments