தேர்தல் அதிகாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

0 821
தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களை இடமாற்றம் செய்ததற்கு தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களை இடமாற்றம் செய்ததற்கு தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடமாற்ற அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 3ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறைதான் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

இதையடுத்து, புதிய பட்டியலை சரிபார்க்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments