அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி?

0 7950
அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை

25 தொகுதிகள் வரை கேட்ட தேமுதிகவினருக்கு அதிகபட்சம் 11 தொகுதிகள் மட்டுமே வழங்க அதிமுக உறுதியுடன் உள்ளதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

தேமுதிக  துணை செயலாள பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், கொள்ளை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன் ராஜ் உள்ளிட்டோருடன் மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று காலை தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேமுதிகவிற்கு 20 முதல் 25 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுகவினர் முன்வராததை தொலைபேசி வாயிலாக அறிந்து கொண்ட தேமுதிக குழுவினர், அமைச்சர் தங்கமணி உடனான பேச்சுவார்த்தையை கைவிட்டு, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments