பிரேசிலில் காணப்பட்ட புதிய வைரஸ் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு- பிரிட்டன் சுகாதாரத் துறை தகவல்

0 1628
பிரேசிலில் காணப்பட்ட புதிய வைரஸ் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு- பிரிட்டன் சுகாதாரத் துறை தகவல்

பிரேசிலில் காணப்பட்ட பி.ஒன் வகை உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 3 பேர் மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு பிரேசிலின் மனாஸ் நகரில் காணப்பட்ட மாறுபட்ட கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேர் பிரேசில் சென்று வந்த காரணத்தால் பரவி இருக்கும் என்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு பரவியதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments