ராணுவ பொது வீரர்களுக்கான தேர்வு ,கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 3 பேர் கைது

0 1149
ராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணுவ பொது வீரர்களுக்கான தேர்வு நேற்று நாடு முழுவதும் நடக்கவிருந்த நிலையில் கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராணுவ புலனாய்வு மற்றும் புனே காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கை குழுவினர் விசாரணை நடத்தினர். முடிவில், புனேவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு பின்னொரு நாளில் நடத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments