மேற்கு வங்கத்தில் 3ஆவது அணியின் சார்பில் பிரமாண்ட பேரணி... ராகுல், பிரியங்கா போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாதபோதும் திரண்ட தொண்டர்கள்

0 3909
மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள 3ஆவது அணியின் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள 3ஆவது அணியின் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக கைகோர்த்துள்ள 3ஆவது அணிக்கு இந்திய மதச்சார்பற்ற முன்னணி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணி சார்பில் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பேரணி நடத்தப்பட்டது. இதில் லட்சத்திற்கும் அதிமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் மக்கள் நல அரசாங்கத்தை அமைக்க இருப்பதாக உறுதி கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments