தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு.. கட்டுப்பாடு நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 86 புள்ளி 37 சதவீதம் பேர் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறிய அமைச்சரவைச் செயலாளர், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றும் படி கேட்டுக் கொண்டார்.
Comments