உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது அப்னா தள எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்குதல்

0 1284
உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது அப்னா தள எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்குதல்

த்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்க் பகுதியில் சுங்கச்சாவடி ஊழியர்களை அப்னா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

அங்குள்ள ராம்நகர் சுங்கச்சாவடிக்கு சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் வர்மா காரில் சென்றபோது, சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதன் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலான நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் மது அருந்திவிட்டு தன்னை மோசமாக நடத்தியதை தொடர்ந்தே சம்பவம் நடைபெற்றதாக ராகேஷ் வர்மா கூறியிருக்கிறார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments