மக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.! அமித் ஷா திட்டவட்டம்.!

0 3367

தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் நான், தமிழ் மக்களோடு, அவர்களது தமிழ் மொழியில் பேச முடியாததை எண்ணி வருந்துகிறேன்

தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை, நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் மதிக்கின்றனர்

எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுக இயக்கத்தோடு, பாஜக கூட்டணி வைத்திருக்கிறது

அதிமுக - பாஜக கூட்டணி என்பது, மக்களுக்கான, மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கின்ற கூட்டணி ஆகும்

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு, மக்களுக்கான அரசு என்பதை, தாம் பிரதமராக முதன்முறை பதவியேற்றபோதே, மோடி தெளிவாக கூறியிருக்கிறார்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம், நாட்டில் வெகுஜனத்திற்கு வீடு என்பதை உறுதி செய்திருக்கிறோம்

காங்கிரசின் 70 ஆண்டுகால ஆட்சியில், பொதுமக்களுக்கு வீடு இல்லை - ஆனால், 7 ஆண்டுகளில் மோடி அரசு அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கழிவறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.

நாட்டிலேயே, கொரோனா காலத்தில், சிறப்பாக செயல்பட்ட அரசு, தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நிர்வாகத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ம் நல்லதொரு பங்களிப்பை நல்குவதாகவும், அமித் ஷா பாராட்டியுள்ளார். இவ்வாறு, தமிழ்நாட்டில் நல்ல முறையில் ஆட்சி செய்ததற்காக, பல்வேறு விருதுகளையும், முதலமைச்சர் இ.பி.எஸ் தலைமையிலான ஆளும் அதிமுக அரசு பெற்றிருப்பதாகவும், அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், பங்கேற்று உரையாற்றி அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில், இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கழிவறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்துள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு, அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments